மனித கழிவுகளை அகற்ற வந்தாச்சு 2.0.ரோபோ!


மனிதனின் கழிவுகளை அகற்ற மனிதர்கள் ஈடுபடுகின்றனர். அப்போது கொடுமையிலும், கொடுமையாக மனித கழிவுகளை அள்ளும் தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி இறந்து விடுகின்றனர். இந்த சம்பவம் தொடர்ச்சியாக நடப்பதால் எப்போது இதற்கு விடிவு காலம் பிறக்கும் என்று ஏங்கியிருந்தவர்களுக்கு தற்போது ஒரு குட் நியூஷ்.


தொடர்ந்த உயிரிழப்புகள்


கோவை, திருப்பூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பாதாள சாக்கடை, செப்டிங் டேங்க் உள்ளிட்டவைகளை க்ளீன் செய்யும் போது, விஷ வாயு தாக்கி, 4 பேர், 5 பேர், 2 பேர் இறந்தார்கள் என்று செய்திகளை கேட்டு நமக்கும் மனதில் சற்று பயமும் ஏற்பட்டதுண்டு.


தன்னையும், குடும் பத்தை காப்பாற்ற ஆபத்தான வேலையில் ஈடுபட்டு உயிரிழப்புத் தான் மிஞ்கியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கண்ணீர் விட்டு எங்களுக்கு ஏற்பட்ட கதி மற்றவர்களுக்கு ஏற்படக் கூடாது என ஆயிரம் முறையாவது எண்ணியிருப்பார்கள்.


வந்தது ரோபோ


மனித கழிவுகளை மனிதர்கள் அள்ளுவதால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில், கோவை இருகூர் அருகே உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் ரோபோ அறிமுகம் செய்யப்பட்டது. இதை கேரளாவைச் சேர்ந்த Gen Robotics நிறுவனம் இந்த ரோபோவை உருவாக்கியுள்ளது.



கோவை மாநகராட்சிக்கு அர்ப்பணிப்பு


இந்த ரோபோவை இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில், கோவை மாநகராட்சிக்கு அர்ப்பணிப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சி கோவையில் நடந்தது. இதில், தேசிய துப்புரவு பணியாளர்கள் மறுவாழ்வு ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் கிர்மானி பங்கேற்று ரோபோவை அறிமுகம் செய்து வைத்தார். 6 ஆண்டில் 174 பேர் இறப்பு சாக்கடை மற்றும் செப்டிங் டேங்க் உள்ளிட்டவைகளை சுத்தம் செய்யும் போது கடந்த 6 ஆண்டுகளில் விஷ வாயு தாக்கி 174 பேர் இறந்துள்ளனர். கோவையில் 19 பேர் பலியாகியுள்ளனர்.


ரோபோ வெர்ஷன் 2.0


கோவைக்கு வழங்கப்பட்டுள்ள ரோபோ 2.0 இதை உருவாக்கிய மென் பொறியாளர் விமல், கேரளாவில் திருவனந்தபுரத்திலும், தமிழகத்தில் கும்பகோணத்திலும் ஏற்கனவே மனித கழிவுகளை தூய்மை செய்யும் ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டது. திருவனந்தபுரத்தில் இருப்பது வெர்ஷன் 1.0 , கும்பகோணத்தில் 1.5 வெர்ஷன் உள்ளது என அப்போது தெரிவித்தார்.


உலகில் முதல் முறை


தற்போது கோவையில் அறிமுகப் படுத்தப்பட உள்ள ரோபோ வெர்ஷன் 2.0 இந்த ரோபோ உலகியே கோவையில் தான் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு பாண்டிகூட் (Bandicoot) என பெயரிடப் பட்டுள்ளது. இந்த ரோபோட் பாகங்கள் ஜெர்மனியிலிருந்து இறக்குமதி யாகியுள்ளது.


கோவையைத் தொடர்ந்து சென்னை யிலும் இந்த ரோபோ 2.0 மனித கழிவு களை அகற்ற வர இருக்கின்றது. இதற்காக பேச்சு வார்த்தை நடந்து வருதாக கூறப்படுகின்றது.