சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீடியோ கேம் என்றால் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். காரணம் அதிநவீன மற்றும் சிறந்த கிராபிக்ஸ் தொழில் நுட்ப வசதியுடன் தற்போது வீடியோ கேம் வெளிவருகிறது. மேலும் சில வீடியோ கேம் உலகம் முழுவதும் அதிக வரவேற்பைப் பெருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள சிறுவன் ஒருவன் வீடியோ கேம் விளையாடி 20 கோடி ரூபாய் பெற்றுள்ளான். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஃபார்ச்சூன் என்ற வீடியோ கேம் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது, இது ஆன்லைன் விளை யாட்டாகும். குறிப்பாக கம்ப்யூட்டரில் அட்வெஞ்சர் கிராபிக்ஸ் மூலம் போட்டியாளர்கள் உள்ளே நுழைய வேண்டும்.
பின்பு வழக்கம்போல கிராபிக்ஸில் அனைத்து ஆயுதங்களும் வரும் அதை எடுத்துக் கொண்டு மற்றவர்களை போட்டு தள்ளிவிட்டு யார் இறுதிவரை வருகிறார்களோ அவர்களே வெற்றி
பெற்றவர் ஆவார். இந்த அசத்தலான போட்டியில் கியர்டோர்ஃப் என்ற 16 வயது சிறுவன் முதல் இ ட த்தை பிடித்து வெற்றி பெற்றான். இந்த சிறுவனுக்கு 20கோடி மதிப்பில் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இவ்வளவு பெரிய பரிசு கிடைத்ததும் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறான்.
இந்த போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்த ஜாடென் அஷ்மான் என்ற 15 வயது சிறுவனுக்கு ஒரு மில்லியன் வரை பரிசு கிடைத்துள்ளது. குறிப்பாக ஃபார்ச்சூன் விளையாட்டை பிரபலப்படுத்தவே இது போன்ற போட்டி நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் உலகம் முழுவதும் பப்ஜி விளையாட்டே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.