ஜிமெயிலில் நூற்றுக்கணக்கிலான கமேம்பட்ட வாய்ப்புகள் நம்முடைய மின்னஞ்சலின் தோற்றத்தை மேம்படுத்த உதவத் தயாராக இருக்கின்றன. அவை ....
1.Smart Compose feature எனும் வாய்ப் பானது நம்முடைய மின்னஞ்சலில் நாம் எழுத நிணைப்பதை autocomplete போன்று கொண்டுவர உதவுகின்றன. General எனும் தாவியின் திரையில் உள்ள Enableexperimental access எனும் வாய்ப்பினை செயல்படுமாறு செய்து கொள்க. மேலும் Writing sugge stions on என்பதன் தேர்வு செய்பெட்டியை தேர்வு செய்து கொண்டு Save Changes எனும் பொத்தானை தெரிவு செய்து சொடுக்குதல் செய்த பின்னர் மின்னஞ் சலில் உரையை உள்ளீடு செய்திட முனைந்தால் ஏராளமான வகையில் நமக்கு உதவுகின்றது.
2.Gmail settings இல் Advanced section அல்லது Labs section இல் Canned Responses எனும் வாய்ப்பினை தெரிவு செய்து கொண்ட பின்னர் தயார் நிலையில் பயன் படுத்திக் கொள்வதற்கான மாதிரி பலகத்தை உருவாக்கி பயன்படுத்தி கொள்ளலாம்.
3. ஜிமெயிலின் snooze எனும் வாய்ப் பானது காலையில், மதியம், மாலையில் என்னென்ன செய்திட வேண்டும் என திட்டமிடவும் அதையே இணைய பக்க மட்டு மல்லாமல் நம்முடைய கைபேசி யிலும் செயல் படுத்திக் கொள்ளுமாறு அனுமதிக்கின்றது
4. Default to full-screen இயல்புநிலையில் புதிய மின்னஞ்சலை உருவாக்குவதற்காக வலது புற புதிய திரையை தோன்றிட செய்கின்றது இதனை முழுத்திரையிலும் விரியச் செய்திட ஒவ்வொரு முறையும் மேலே வலது புற மூலையிலுள்ள பொத்தானை தேர்வு செய்து கிளிக் செய்வதற்கு பதிலாக Default to full-screen எனும் வாய்ப்பினை தேர்வு செய்து கொண்டால் போதும் உடன் முழுதிரையிலும் மின்னஞ்சல் உருவாக்கிடும் திரை விரிந்து கொள்ளும்.
5. Show 'Send & Archive' button in reply இதனை பயன்படுத்திக் கொள்வதற்காக Gmail's settings. திரைக்கு செல்க அங்கு Show 'Send & Archive' button in reply” எனும் வாய்ப்பினை தேர்வு செய்து கொண்டு Save changes எனும் பொத்தானை தேர்வு செய்து சொடுக்குதல் செய்த பின்னர் மின்னஞ்சலை தயார்செய்து இந்த பொத்தானை தேர்வு செய்து கிளிக் செய்தால் போதும் மின்னஞ்சலையும் அனுப்பி விடும் இதுவரை அனுப்பிய மின்னஞ்சல்களையும் திரையில் பட்டியலாக காண்பிக்கும்.
6. Undo Send இதனை பயன்படுத்திக் கொள்வதற்காக Gmail's settings. திரைக்கு செல்க அங்கு Undo Send எனும் வாய்ப்பிற்கு அருகிலுள்ள கீழறங்கு பட்டியலை விரியச்செய்து 10, 20, 30 ஆகியவற்றில் ஒரு வாய்ப்பினை தெரிவு செய்து கொண்டு Save changes எனும் பொத்தானை தேர்வு செய்து கிளிக் செய்த பின்னர் மின்னஞ்சலை தயார்செய்து இந்த பொத்தானை தேர்வு செய்து கிளிக் செய்தால் போதும் எவ்வளவு நேரத்தில் மனமாறி அனுப்பாமல் தவிர்த்திடலாம் என முடிவு செய்கின்றது.
7. Priority Inbox எனும் வாய்ப்பு நம்முடைய உள்வருகை பெட்டியை சிறிது வித்தியாசமாக மாற்றியமைத்திட்டால் நன்றாக இருக்குமே என நம்மில் பலர் விரும்புவோம் அவ்வாறானவர்கள் மேலே உள் வருகை பெட்டியின் கீழிறங்கு பெட்டியிலுள்ள வாய்ப்புகளுள் Default என்பது இயல்பு நிலையில் தற்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருப்பது, Important first முக்கியமானவைகளை முதன்மைபடுத்திடவும், Unread first படிக்காதவைகளை முதன்மைப் படுத்திடவும், Starred first, நாம் விரும்பிய வாறு மாற்றியமைத்திட Priority Inbox ஆகியவற்றில் நாம் விரும்பியவாறு தேர்வு செய்து அமைத்துக் கொள்க.
8.Offline எனும் வாய்ப்பு இணைய இணைப்பு அருகலை இணைப்பு இல்லாத போதும் ஜி-மெயிலை பயன் படுத்திக் கொள்வதற்காக Gmail's settings.
திரைக்கு செல்க அங்கு Offline எனும் வாய்ப்பினை தேர்வு செய்து கொண்டு Save Changes எனும் பொத்தானை தேர்வு செய்து கிளிக் செய்த பின்னர் பயன் படுத்திக் கொண்டிருக்கும் போது இணைய இணப்பு இல்லாது போனாலும் தொடர்ந்து மின்னஞ்சலின் பணியை முடித்திடலாம்.