உணவுப்பிரியர்களுக்கு உதவும் ஆப்!

நோம் எனும் இணைய தளமானது புதிய உணவு வகைகளை விரும்பு வோர்கள் ஒன்றிணைந்து தங்களுடைய அனுபவங்களை நேரலையாக பகிர்ந்து கொள்ளும் ஒரு சமூக குழுவலைத் தளமாகும்.


இங்கு அவரவர்கள் விரும்பி உண்ணும் உணவினை எவ்வாறு தயார் செய்வது என்ற விவரங்களை காணொளிப் படங்களின் வாயிலாக குழுவான நபர்கள் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர். மிக முக்கியமாக இந்த இணைய தளத்தின் முகப்பு பக்கத்தில் நம்மால் என்னென்ன வெல்லாம் செய்திட முடியும் என்ற முழு விவரங்களையும் அறிந்து , தெரிந்து கொள்ளலாம். முதன் முதல் இதன் முகப்பு பக்கத்திற்கு வந்தவுடன் இன்றைய முக்கிய உள்ளடக்கங்கள் யாவும் பார்வையாளர்கள் அதிகம் விரும்பியவை, அதிகம் பார்வையிட்டவை, பெரும்பாலானவர்களால் விரும்பப் பட்டவை அதனுடைய தற்போதைய நிலை என்ன ஆகிய விவரங்களை அறிந்துகொள்ளலாம்.


இதில் நம்முடைய பெயர் மின்னஞ் சல் முகவரி கடவுச்சொற்களுடன் ஒரு பயனாளராக பதிவு செய்துகொண்டால் நாமும் நாம் விரும்பும் நம்முடைய உணவு விவரங்களையும் அதனை தயார்செய்திடும் செய்முறை விவரங் களையும் பதிவேற்றம் செய்திடலாம்.


இன்றே https://nom.com எனும் இந்த தளத்திற்கு வந்து நீங்களும் உங்களுடைய சமையல் அனுபவங்களையும் , உணவு அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.