கேட்ஜெட்களை மழைகாலத்தில் பாதுகாத்துக் கொள்வது எப்படி?


மழைகாலம் ஆரம்பித்துவிட்டதுமசெல்போன் போன்று எப்போதும் உடனிருக்கும் கேட்ஜெட்களை மழை காலத்தில் எப்படி பாதுகாக்கலாம்?


கேட்ஜெட்களை மழை நீரில் இருந்து பாதுகாப்பதற்கான கருவிகள் சந்தையில் மிகவும் குறைவாகவே இருக்கின்றன.


பாதுகாப்பான கேட்ஜெட்கள்


 அவற்றை பயன்படுத்தினாலும் கூட முழுமையாக மழை நீரிலிருந்து பாதுகாக்க முடியாது. அவசியமென்றால், நீரில் பாதிக்கப்படாத தன்மை கொண்ட கேட்ஜெட்களை வாங்கி பயன்படுத்தலாம்.


ஆனால் அவற்றின் விலை சற்று அதிகம்.1p67 மற்றும் 1p68 சர்டிஃபிகேட் கொண்ட கேட்ஜெட்கள் நீரில் பாதிக்கப்படாத தன்மை கொண்டவை.


மொபைல் தவிர்த்து நம்முடன் பெரும்பாலும் இயர்போன், பவர் பேங்க், லேப்டாப் ஆகியவற்றைத்தான் எடுத்துச்செல்வோம்.


இவற்றை மொத்தமாக பாதுகாப் பதற்காக வாட்டர் ஃப்ரூப் பேக்குகளைப் பயன் படுத்தலாம். மொபைலை நனையாமல் பாதுகாப்பதற்காகவே, வட்டர்ப்ரூப் கேஸ்கள், கவர்கள் இருக்கின்றன. இதனுள்ளே வைத்து மொபைலை லாக் செய்து விடலாம். ஆனால் அதனுள்ளே இருக்கும்போது ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரை பயன் படுத்த முடியாது.


மழையில் நனைத்தால்..


மழையில் நனைத்தால்மொபைல் ரூம் அட்வைசர்கள் சிலரின் கருத்துப்படி அவர்களிடம் சரி செய்வதற் காக கொண்டு வரப்படும் மொபைல்கள், பெரும்பாலும் பழுதாவதற்குக் காரணம், அவை முழுமையாக உலவதற்கு முன்னரே ஆன் செய்யப்பட்டு விடுவதுதான்.


நீரில் நனைந்திருக்கும்போது , மொபைலை ஆன் செய்தால், அது முழுவமாகப் பாதிப்படையக் கூடிய வாய்ப்புகள் அதிகம்.


மொபைல் போன் நீரில் நனைந்து விட்டால் அதை உடனே (Switch off) அணைத்து விடவேண்டும். முழுவதுமாக உலர்ந்து விட்டது என்பதைத் தெரிந்து கொண்ட பிறகு வேண்டுமானால் ஆன் செய்து பார்க்கலாம்.


இல்லையென்றால் நேரடியாக மொபைல் சர்வீஸ் சென்டருக்குக் கொண்டு செல்வது நல்லது.                                                 -ஜே.கே.மாறன்.