இது ஒரு IPTV எனும் தொலைகாட்சி இயக்கியாகும். தொலைகாட்சி நிகழ்ச்சிகளை பதிவுசெய்து கொள்ளவும் முக்கிய நிகழ்ச்சிகளை குறித்துக் கொண்டு தேவையானபோது மீண்டும் காணவும் உதவும் ஒரு கருவியாகும்.
இது விண்டோ , லினக்ஸ், மேக் ஆகிய அனைத்து இயக்க முறைமைகளிலும் செயல்படும் திறன் மிக்கது. இதனுடைய Miniplayer எனும் வசதியை பயன் படுத்தி திரையின் மூலையில் நம்முடைய விருப்பமான நிகழ்ச்சிகளை கண்டு களித்துக் கொண்டே வேறு ஏதாவது இதே போன்று உள்ளதாவென இணையத்தில் தேடிப் பிடித்திட முடியும் Ctrl + D ஆகிய விசைகளை அழுத்தி நமக்கு விருப்பமான அலைவரிசை தொலைகாட்சி நிகழ்ச்சிகளை நேரடியாக இதனை துவக்கிய வுடன் திரையில் காணுமாறு செய்து கொள்ளலாம். அந்த பட்டியல் தேவை யில்லை எனில் Ctrl + D ஆகிய விசை களை அழுத்தி நீக்கம் செய்து கொள்லலாம். நண்பர்களின் விருப்பத் தேர்வான அலைவரிசைகளை இணைத்துக் கொள்ள இதிலுள்ள Community எனும் வசதி பயன்படுகின்றது. இதிலுள்ள channels being assisted எனும் வசதி நேரலையாக தொலைக் காட்சி நிகழ்ச்சிகளை காணும் பார்வை யாளர்களின் கருத்து என்னவென அறிந்து கொள்ள உதவிகின்றது.
இது Google Chromecast இதற்கு ஆதரவாக செயல்படுவதுடன் எந்தவொரு சாதனத் தி லிருந்தும் கணினியிலிருந்தும் கானொளிக் காட்சி படங்களை அல்லது நேரலையாக நம்முடைய தொலைக் காட்சி நிகழ்ச்சிகளுக்காக வென பதிவேற்றம் செய்து கொள்ளமுடியும்.
M3U8, RTMP, RTSP என்பன போன்ற பல்வேறு வகைகளில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளி, ஒலி பரப்பு செய்திட உதவுகின்றது. இது தானாகவே எந்தவொரு இணைய பக்கத்தையும் திறந்தவுடன் அதன் ஒளி, ஒலி பரப்பு இணைப்பைத் தேடி அடைகின்றது இதனை பயன்படுத்தி தொலைகாட்சி நிகழ்ச்சிகளை ஒளி, ஒலி பரப்பு செய்திடவும் கண்டுகளிக்கவும் HDMI Cable, VGA-HDMI Converter, Chromecast, VGA-RCA Cable ஆகிய நான்கு மட்டுமே நமக்குக் கூடுதலாக தேவையாகும்.