நம்முடைய சொந்த காணொளி படங்கள், உருவப்படங்கள் ஆவணங்கள் போன்ற தரவுகளின் கோப்புகளை பாதுகாப்பாக சேமித்திடவும் பகிர்ந்து கொள்ளவும் own cloud எனும் சேவையை பயன்படுத்திக் கொள்ள நம்முடைய பணிகளுக்குத் தேவையான டேட்டாக்களை இதனுடைய FTP drive வாயிலாக அணுகி பெற்றுக் கொள்ளலாம்.
உருவப்படங்களை இணையத்தின் வாயிலாக வெனில் Dropbox மூலம் பகிர்ந்து கொள்ளலாம் நம்முடைய வளாகத்தின் வாயிலாக NAS மூலம் பகிர்ந்து கொள்ளலாம் இவையனைத்தையும் நம்முடைய owncloud சேவையாளர் வாயிலாகவே பகிர்ந்து கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ளவும் முடியும். இது நம்முடைய டேட்டாக்களை மிக பாதுகாப்பாக வைத்திருக்கும்.
ஒரு நம்பகமான சேமிப்பக இடமாகும். வெளியூர்களுக்கு பயனிக்கும் போது நம்முடைய டேட்டாக்களின் Folderகளை Android அல்லது ios கைபேசி சாதனங்களின் வாயிலாக எளிதாக அணுகி பயன்படுத்தி கொள்ளலாம். செல்லுமிடத்தில் இந்த சாதனங்களின் வாயிலாக நம்முடைய owncloud சேவையாளருடன் இணைப்பு ஏற்படுத்தியவுடன் தானாகவே உருவப் படங்களை பதிவேற்றம் செய்திடவும், பதிவிறக்கம் செய்திடவும் முடியும்.
நம்முடைய பணியிடத்திலுள்ள கணினியின் வாடிக்கையாளர் கணினியின் வாயிலாக டேட்டாக்களின் கோப்புகளை எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளவும், பதிவேற்றம் செய்திடவும் அவைகளுக்கிடையே ஒத்தியங்குவதற்காகவென தனியாக Folderகளை உருவாக்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.
நாம் எங்கிருந்தாலும் நம்முடைய டேட்டாக்களை பயன்படுத்திக் கொள்ளவும் யாருடனும் பகிர்ந்து கொள்ளவும் முடியும். கடவுச்சொற்களின் வாயிலாக பாதுகாக்கப்பட்ட Folderகளை பதிவேற்றம் செய்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் முடியும் . தேவையெனில் ஆவணங்களை திருத்தம் செய்து கொள்ளவும் காணொளி வாயிலாக தொலைபேசி போன்று நண்பர்களுடன் பேசவும் முடியும். PDF, images, text files, Open Document, Word files போன்ற எந்தவொரு வடிவமைப்புகளிலுமுள்ள Folderகளை காட்சியாக காணவும் திருத்தம் செய்திடவும் அனுமதிக்கின்றது. Anti-virus பயன்பாடுகளுடன் ஒத்தியங்கி கோப்புகளின் பாதுகாப்பினை உறுதி செய்து கொள்கின்றது. LDAP/Active போன்ற இயக்ககங்களுடன் ஒத்தியங்குகின்றது. REST API போன்ற மூன்றாவது நபர் பயன்பாட்டினையும் கைபேசி கணினி பயன்பாடுகளின் வாயிலாக நம்முடைய தரவுகளை கட்டுப்படுத்தவும் இது அனுமதிக்கின்றது.
திறன் வாய்ந்த owncloud App API, webhooks போன்றவற்றை வெளியீடு செய்வதற்கு பயன்படுத்திக் கொள்கின்றது. இது Mac, Windows , Linux, Android, iPhone, Blackberry, Android Tablet, iPad ஆகிய அனைத்திலும் செயல்படும் ஒருகட்டற்ற சேமிப்பாக சேவையாளராக செயல்படுகின்றது.