தற்போது இணைய இணைப்பு மட்டும் இருந்தால் போதும் நமக்கான எந்தவொரு செயலையும் நேரடியாக செயல்படுத்தி பயன்பெறலாம் என்ற அளவிற்கு நம்முடைய வாழ்க்கை வசதிகள் மிகவும் மேம்பட்டுள்ளன. இவைகளில் விளம்பரங்களோ மேல்மீட்புப்பட்டிகளோ இந்த ஆப்பிளிக்கேஷனை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் என நம்மைத் தூண்டுகின்ற மின்மினுப்புகளோ எதுவும் இல்லாமல் நாம் குறிப்பிட்ட செயலை எந்தவிததொந்திரவிற்கும் ஆளாகாமல் இணையத்தில் நேரடியாக செயல்படுத்தி பயன்பெறலாம்.
1 online JSON கருவிகள்:
இணையத்தின் வாயிலாக நேரடியாக JSON கருவிகளை பயன்படுத்து வதற்காக முதன் முதலாக Browserling' எனும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட தொரு இணையதளமாகும் இது JSON எனும் கட்டமைவுடன் கூடிய கோப்பு களை நாம் பயன்படுத்திக் கொள்வதற்காக உதவுகின்றது. மீகச்சிறிய JSON, அழகான JSON, ஏற்புகை செய்திடும் JSON, தப்பிச்செல்லாத JSON, JSON இலிருந்து 64 இன் அடிப்படையிலான குறிமுறை வரிகளுக்கு மறையாக்கம் செய்தல் அல்லது 64 இன் அடிப்படையிலான குறி முறைவரியிலிருந்து JSON இற்கு எதிர்மறையாக்கம் செய்தல் கோப்புகளின் வடிவமைப்பை XML, csv, TSV, YAML போன்ற எந்தவொரு வடிவமைப்பிலும் உருமாற்றம் செய்திடும் JSON, JSON ஐ HTML அட்டவணை LaTeX அட்டவணை ஆகிய எந்த வகையிலான அட்டவணையாக உருமாற்றம் செய்தல் ஆகிய பல்வேறு பணிகளை நம்முடைய கணினிகளில் இதற்கான கட்டமைப்பை நிறுவுகை செய்திடாமலே யே பயன்படுத்திக் கொள்ள முடியும்.
2. online string கருவிகள்:
இணையத்தின் வாயிலாக String களை நேரடியாக பயன்படுத்த உதவிடும் Browserling' எனும் நிறுவனத்தின் இரண்டாவது மிகப்பெரிய இணைய பக்கமாகும் இந்த கருவிகள் மறையாக்கம் செய்தல் எதிர்மறையாக்கம் செய்தல் உருமாற்றம் செய்தல் வடிகட்டுதல் பதிலீடுசெய்தல் stringsகளை உருவாக்குதல் ஆகிய பல்வேறு பணிகளை நம்முடைய கணினிகளில் இதற்கான கட்டமைப்பை நிறுவுகை செய்திடாமல் செய்திடஉதவுகின்றது. உதாரணமாக URL மறையாக்க strings, URL எதிர் மறையாக்க strings, HTML மறையாக்க strings, HTML எதிர் மறையாக்க strings, 64 இன் அடிப்படையிலான மறையாக்க strings 64 இன் அடிப்படையிலான எதிர் மறையாக்க strings. பிரித்தல் இணைத்தல் பைனரிக்கு உருமாற்றம் செய்தல் ஆகிய Strings தொட ர்பான பல்வேறு பணிகளையும் இதில் செயல்படுத்தி பயன்பெறலாம்.
3 Online Csv கருவிகள்: இதில் காற்புள்ளியால் மதிப்புகளை பிரித்திடும் Folderகளின் டேட்டாக்களை கையாளுகின்றது அதாவது இந்த கருவியின் வாயிலாக Csv வடிமைப்பு Folderகளை JSON, XML, TSV, YAML ஆகிய வடிமைப்பிற்கு உருமாற்றம் செய்தல், 64 இன் அடிப்படை யிலான குறிமுறைவரிகளுக்கு csv வடிவமைப்பிலிருந்து மறையாக்கம் செய்தல், 64 இன் அடிப்படையிலான கோடிங்கிலிருந்து CSV வடிவமைப்பிற்கு எதிர் மறையாக்கம் செய்தல், நெடுவரிசைகளில் கிடை வரிசைகளில் Csv வடிவமைப்பிலுள்ள பல்வேறு தரவுகளை இடமாற்றம் செய்தல், பதிலீடுசெய்தல் சேர்த்தல், நீக்கம்செய்தல் நெடுவரிசையை swap செய்தல் transpose செய்தல் மேலும் csv வடிவமைப்பு கோப்புகளை PDF ஆவணமாக HTML அட்டணையாக, Excel அட்டணை யாக , La Tex அட்டணையாக உரு மாற்றம் செய்தல் ஆகிய பல்வேறு பணிகளை நம்முடைய கணினிகளில் இதற்கான கட்டமைப்பு நிறுவுகை செய்திடாமல் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
4 Online XML கருவிகள்:
இதன் வாயிலாக XML வடிவமைப்பு கோப்புகளை JSON, csv, YAML ஆகிய வடிவமைப்பிற்கு உருமாற்றம் செய்தல் 64 இன் அடிப்படையிலான மறை யாக்கம்செய்தல், XML 64 அடிப்படை யிலான கோடிங்களை XML இதற்கு எதிர் மறையாக்கம்செய்தல் இரு XML கோப்பு களை ஒப்பீடு செய்தல் XML ஆவணங் களின் புள்ளிவிவரங்களை காட்சியாக காணுதல் ஆகிய பல்வேறு பணிகளை நம்முடைய கணினிகளில் இதற்கான கட்டமைப்பை நிறுவுகை செய்திடாமல் பயன்படுத்திக் கொள்ள முடியும்
இவை மட்டுமல்லாமல் வருங் காலத்தில் Online TSV (Tab Separated Values) கருவிகள், Online YAML (Yet Another Markup Language) கருவிகள், Online PDF கருவிகள், Online IMAGE கருவிகள், Online AUDIO கருவிகள், Online BROWSER கருவிகள், Online css கருவிகள், Online JS (Java Script) கருவிகள் , Online CRYPTO கருவிகள், Online RANDOM கருவிகள், Online FILE கருவிகள் , Online TIME கருவிகள் ஆகிய எண்ணற்ற கருவிகளை இணையத்தில் நேரடியாக கட்டமைப்பை நம்முடைய கணினியில் நிறுவுகை செய்திடாமல் பயன்படுத்திக் கொள்வதற்கான வசதிகளைக் கொண்டு வர உள்ளனர் என்ற கூடுதல் செய்தியையும் மனதில் கொள்ளலாம்.