வாட்ஸ்ஆப்பில் டார்க்மோடா..!


இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் வாட்ஸ்ஆ ப்-ன் டார்க் மோட் அம்சம் விரைவில் வருமா என்று அதிகளவில் எதிர்பார்கின்றனர். இதற்கு தற்சமயம் ஒரு விடை கிடைத்துவிட்டது என்று தான் கூறவேண்டும்.


மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டார்க் மோடு அம்சம் ஆனது வாட்ஸ்ஆப் பீட்டா பதிப்பில் காணப்பட்டுள்ளது. அது சார்ந்த அனைத்து ஸ்கிரீன் ஷாட்களும் வெளியான வண்ணம் உள்ளன. குறிப்பாக வாட்ஸ்ஆப் பீட்டாவில் வந்து விட்டது என்றால் கூடிய விரைவில் பொது தளத்திற்கும் வரும் என்று தான் அர்த்தம்.


ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பு 2.19.282 மேலும் வாட்ஸ்ஆப் பீட்டா பதிப்பில் காணப்பட்டுள்ள டார்க் மோட் அம்சம் சார்ந்த தகவலை வாட்ஸ் ஆப் பீட்டா சோதனையாளர் ஆன WABetaInfo மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு சமீபத்திய ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பு 2.19.282 இல் தீம் செட்டிங்ஸ் எனப்படும் புதிய பிரிவு ஆப் செட்டிங்ஸ்-ல் சேர்க்கப்பட்டுள்ளது.


சிஸ்டம் டீபால்ட் மோட் அதாவது வாட்ஸ் ஆப் தீம் செட்டிங்ஸ் பகுதியில் பயனர்கள் தேர்வு செய்ய மூன்று விருப்பங்கள் இருக்கும் என்றும் அதில் ஒன்று லைட் தீம் (வெள்ளை ) என்றும், இரண்டாவது டார்க் தீம் எனும் விருப்பம் இருக்கும். இது அனைவரும் எதிர்பார்த்த டார்க் மோட் அம்சம் ஆகும். மூன்றாவதாக சிஸ்டம் டீபால்ட் மோட் எனும் விருப்பம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


                                                   


குறிப்பாக பயனர்கள் மூன்றாவது விருப்பத்தை தேர்வு செய்யும் பட்சத்தில் உங்களின் மெயின் மொபைல் செட்டிங் ஆனது டார்க் மோட் ஆக இருக்கும் பட்சத்தில் வாட்ஸ் ஆப் தானாகவே டார்க் மோடிற்கு மாறும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இப்போது ஆண்ட்ராய்டு பீட்டா தளத்தில் காணப்படும் இந்த அம்சத்தை பயனர்கள் டிவிட்டர் மற்றும் அனைத்து தளங்களிலும் பகிர்ந்து வருகின்றனர்.


வினாடிகள் அல்லது 1மணி நேரத்திற்கு இடையில் இதற்கு முன்பு வாட்ஸ் ஆப் நிறுவனம் மெசேஜ் தானகவே அழியும் வசதியை "Disappearing Message” சோதனை செய்தது. அதாவது இந்த அம்சம் எப்படி செயல் படும் என்றால் வாட்ஸ் ஆப்-ல் இந்த அம்சம் வந்தவுடன் முதலில் ஒரு பாப் அப் விண்டோ காட்சிப்படுகிறது. இது குறிப்பிட்ட மெசேஜின் காலாவதி நேரத்தை நீங்களே தேர்வு செய்யும் அணுகலை வழங்குகிறது. அதில் 5 வினாடி கள் அல்லது 1மணி நேரத்திற்கு இடையில் தேர்வு செய்யும் விருப்பங்கள் காணப் படுகிறது.


பிரைவேட் மெசேஜ்யை பின்பு இந்த அம்சம் இயக்கப்பட்டதும் குறிப்பிட்ட வாட்ஸ்ஆப் குரூப்பில் அனுப்பப்படும் எந்தவொரு மெசேஜும் நிர்ணயிக்கப் பட்ட காலத்திற்குப்பிறகு தானாகவே அழியும். இந்த அம்சம் முதலில் குரூப் மெசேஜில் மட்டுமே செயல்படும் எனவும் வருங்காலத்தில் பிரைவேட் மெசேஜ்க்கும் செயல்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.