அனைவருக்கும் பயனுள்ள வாட்ஸ்ஆப் டிப்ஸ்!


ப்ரொபைல் போட்டோ : உங்க நண்பரின் ப்ரொபைல் போட்டோவை வாட்ஸ் அப்பில் மாற்ற முடியும். ஆனால் அது உங்களுக்கு மட்டும் தான் தெரியும். அதற்கு உங்களுக்கு பிடித்த போட்டோவை 5611561 அளவில் எடுத்து அதில் உங்க நண்பர் எண்ணை பதிவு செய்து, மெமரி கார்டு-ல் வாட்ஸ் அப் ப்ரொபைல் போட்டோ சென்று ஏற்கனவே இருக்கும் போட் டோவை ரீ ப்ளேஸ் செய்தால் வேலை முடிந்தது.


வாட்ஸ் ஆப் அக்கவுன்ட்: ஆண்ட்ராய்டில் டூயல் சிம் பயன் படுத்துபவர்கள் இரு வாட்ஸ் ஆப் அக்கவுன்டகளை ஆரம்பிக்க நீங்க ஸ்விட்ச்மீ என்ற அப்ளிகேஷனை பயன்படுத்தலாம்.


மெசேஜ் : தவறுதலாக டெலீட் செய்த மெசேஜ்களை மீட்க உங்க எஸ்டி கார்டு சென்று வாட்ஸ் ஆப் டேட்டாபேஸ் இல் நீங்கள் டெலீட் செய்த அனைத்து மெசேஜ்களும் இருக்கும்.


ஆட்டோ இமேஜ் டவுன்லோடு : வாட்ஸ் அப்பில் வரும் போட்டோ , வீடியோ தானாக டவுன்லோடு ஆவதை கட்டுப் படுத்த செட்டிங்ஸ் சாட் செட்டிங்ஸ் மீடியா ஆட்டோ டவுன்லோடு சென்று தேவை யான ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ளலாம்.


மொபைல் நம்பர் : உங்க மொபைல் நம்பர் என்டர் செய்யாமல் வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியும் என உங்களுக்கு தெரியுமா.


வாய்ஸ் நோட்டிபிக்கேஷன் : வாட்ஸ் ஆப் நோட்டிப்பிகேஷன்களை படிக்க நேரமில்லை என்றால் வாய்ஸ் ஃபார் நோட்டிபிகேஷன் செயலி மூலம் குரல் வடிவில் நோட்டிபிகேஷன்களை பெற முடியும். |


வாட்ஸ் ஆப் ஸ்டேட்ஸ் : வாட்ஸ் ஸ்டேட் ஃபார் வாட்ஸ் ஆப் அப்ளிகேஷன் மூலம் நீங்கள் வாட்ஸ் ஆப் டவுன்லோடு செய்ததில் இருந்து மேற்கொண்டவற்றை அறிந்து கொள்ள முடியும்.


வாட்ஸ் அப் அக்கவுண்ட் : வாட்ஸ் அப் அக்கவுண்டை டெலீட் செய்ய செட்டிங்ஸ் அக்கவுன்ட் டெலீட் கொடுத்தால் வேலை முடிந்தது


ஸ்பை : உங்க நண்பரின் வாட்ஸ் ஆப் அக்கவுண்டை வேவு பார்க்க ஸ்பை மாஸ்டர் ப்ரோ தான் சிறந்தது. உங்க நண்பரின் அக்கவுண்டில் இருக்கும் அனைத்து மெசேஜ் மற்றும் போட்டோ, வீடியோ என எல்லாவற்றையும் இதில் பார்க்க முடியும்.


                                                                                                                      - தீபா.