சியோமி நிறுவனத்தின் பிராண்ட் ரெட்மி தற்சமயம் புதிய அசத்தலான லேப்டாப் மாடலை ரூ.30,092 விலையில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என ரெட்மி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெட்மிபுக் 14 டிஸ்பிளே:
ரெட்மிபுக்14 லேப்டாப் மாடல் பொதுவாக 14 இன்ச் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1920 x 1080 பிக்சல் ரெசல்லூயுஷன், சிறந்த பிரைட்னஸ் வசதி மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மெட்டல் வடிவமைப்பு:
இந்த சாதனம் மெட்டல் வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது, பின்பு ஸ்போர்ட்ஸ் முழு அளவு கீபோர்டு அம்சம், 1.5கிலோ எடை, 17,95எம்எம் திக்னஸ் போன்ற அட்டகாசமான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த லேப்டாப்.
அட்டகாசமான சிப்செட் வசதி:
ரெட்மிபுக்14 லேப்டாப் மாடல் 8 ஆவது ஜென் இன்டெல் கோர் ஐ3 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது பின்பு 4 ஜிபி ரேம் மற்றும் 256TH உள்ள டக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது.
பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:
இதில் 10 மணி நேரம் தாங்கக்கூடிய பேட்டரி வசதி வழங்கப்பட்டுள்ளது, பின்பு 2 எச்டிஎம் போர்ட், யுஎஸ்பி 3.0 போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி 2.0 போர்ட், வைஃபை, ப்ளூடூத் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம்.