உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் அதிகளவில் ட்ரூகாலர் செயலியை பயன்படுத்துகின்றனர், மேலும் அண்மையில் இந்நிறுவனத்தைப்பற்றி பல புகார்கள் வந்தபோதிலும் அதை சரிசெய்து தொடர்ந்து பல்வேறு புதிய சேவைகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் காலர் செயலியில் Truecaller Voice, Voice over Internet Protocol (VOIP) அடிப்படையிலான குரல் அழைப்பு சேவை, ஒருங்கிணைந்த கால் வெய்ட்டிங் (Call wait- ing) அம்சத்துடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
அதாவது புதிய அப்டேட் என்ன வென்றால் ட்ரூ காலர் செயலியில் பயனர்களுக்கு "குறுக்கீடு இல்லாத” குரல் அழைப்பு வழங்கும் சேவையை அறிமுகம் செய்கிறது. குறிப்பாக இந்த புதிய அப்டேட் தவிர உலகெங்கிலும் ஐ ஓ எஸ் ( ஐ போன்) பயனர்களுக்கும் ட்ரூகாலர் வாய்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த சேவை முன்பு ஆண்டராய்டு பயனர்களுக்கு வழங்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது . பொதுவாக ட்ரூகாலர் செயலியானது குரல் அழைப்புகளை இயக்க வடிவமைக் கப்பட்டுள்ளது - பிரபலமான பயன் படுகளான வாட்ஸ் ஆப் மற்றும் ஸ்கைப் போன்ற குரல் அழைப்பு செயலிகளுக்கு எதிரான போட்டியாளராக இருக்கிறது இந்த ட்ரூகாலர் செயலி.
கால் வெய்ட்டிங் அம்சத்துடன் Truecaller voice, பயனாகளுக்கு இரண்டாவது அழைபபைப் பெறும்போது அவாகளுக்குத் தெரிவிக்கும். தற்போதைய அழைப்பை தானாக இடைநிறுத்தாமல் அறிவிப்பு வருகிறது. மேலும் இந்த Call Waiting status குறித்து இரண்டாவது அழைப்பாளருக்கு ட்ரூகாலர்செயலி தெரிவிக்கிறது.
குறிப்பாக பயனர்களுக்கு தற்போதைய VOIP calls தொடர அல்லது அவர் களின் விருப்பத்தின் படி இரண்டாவது அழைப்பிற்கு மாற வசதியை வழங்குகிறது. தொலை பேசி மற்றும் VOIP calls இரண்டிலும் தடையின்றி செயல் பட இந்த அம்சம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் call waiting அம்சத்துடன் caller Id அம்சமும் பயனர்கள் இரண்டாவது அழைப் பில் கலந்து கொள் வேண்டுமா அல்லது தற்போதைய அழைப்பைத் தொடர வேண்டுமா என்பதை தீர்மானிக்க உதவுகிறதுமேலும் உலகளவில் அனைத்து ஐபோன் பயனர்களுக்கும் Truecaller Voice-ஐ வெளியிடுவதன் மூலம் ட்ரூகாலர் நிறுவனம் தனது voip சேவையை விரிவாக்குவதாக அறிவித்துள்ளது.
ஆரம்பத்தில் இந்த சேவை ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் மட்டும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளவில், ட்ரூ காலர் நிறுவனத்திற்கு 150 மில்லியன் தினசரி பயனர்கள் உள்ளனர்.