உங்களது கணினி வசதிகள் ஸ்மார்ட்போனில் வேண்டுமா?


உங்களுடைய விண்டோஸ் கணினியை உங்களின் ஸ்மார்ட்போனுடன் இணைத்து, ஸ்மார்ட்போனில் உங்கள் கணினியை இயக்க ஆசைப்படுகிறீர்களா? அப்போ இந்த பதிவு உங்களுக்கானது தான். கணினி மற்றும் லேப்டாப் பில் அதிக நேரம் செலவிடும் பயனர்களுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


இலவசமாகக் கிடைக்கும் சேவை உங்கள் கணினியைக் கையில் சுருக்கி, உங்கள் ஸ்மார்ட்போனில் பயன்படுத்த விரும்பும் பயனர்களில் ஐபோன் பயனர்களுக்கு மட்டுமே இது நல்ல செய்தியாக இருக்கும். உங்களின் ஐ போன் மற்றும் ஐ பேட் சாதனத்தில் உங்கள் கணினியை இணைத்து இயக்க முடியும். மேலும் குறிப்பாக இந்த சேவை இலவசமாகக் கிடைக்கிறது. இந்த சேவையை எப்படி செயல்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம்.


            விண்டோஸ் கணினியை உங்கள் ஐபோனுடன் இணைக்க:


1. முதலில் ultaVNC என்ற அப்ளிகேஷனை உங்கள் விண்டோஸ் கணினியில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.


குறிப்பு: பதிவிறக்கம் செய்யும் பொழுது ulta VNCசர்வரை தேர்ந்தெடுக்க வேண்டும்.


2. ulta VNC பின்னர் கணினியை ரீபூட் (reboot) செய்ய வேண்டும்.


3. ஸ்டார்ட் மெனுவில் சென்று ulta VNC சர்வரை ரன் செய்ய வேண்டும்.


4. ulta VNCசர்வரை ரைட் கிளிக் செய்தால் வரும் மெனுவில் அட்மின் ப்ராபெர்டிஸில் 2 OT OT allows continuing whenever you get any firewall alert என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.


5. Default செட்டிங்கில் எந்த மாற்றமும் தேவை இல்லை.VNC தொடர்பை மட்டுமே கவனிக்க வேண்டும்.


6. அட்மின் அக்சஸ் செய்த பிறகு சேவ் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.


          ஐபோன் அல்லது ஐபேட் இல் இந்த சேவையை இணைக்க:


1. ஆப் ஸ்டோரில் இருந்து VNC வியூவரை (VNC viewer) ஐபோன், ஐபேட்ல் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


2. இடது மேல் பக்கத்தில் இருக்கும் add(+) என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.


3. பின்னர், IP அட்ரஸ் மற்றும் பெயரைக் குறிப்பிட வேண்டும். இரண்டு மூன்று தொடர்புகள் வைத்திருக்கும் நிலையில் ஒவ்வொன்றுக்கும் பெயரை பதிவு செய்ய வேண்டும்.



4. இறுதியாக சேவ் செய்து கணினியை உங்கள் போனுடன் இணைத்துக் கொள்ளுங்கள்.


5. கணினி சர்வரில் கொடுக்கப்பட்ட பாஸ்வோர்டை டைப் செய்து உங்கள் அக்சஸ்சிற்கு ஆம் என்று தேர்ந்தெடுத்து தொடர்பைத் தொடங்கலாம்.


கூடுதல் செயலிகள் இந்த செயல் முறைப்படி உங்கள் ios சாதனங்களில் உங்கள் கணினியை கனெக்ட் செய்து பயன்படுத்தலாம். VNC வி யூ வரைத் தவிர மேலும் பல செயலிகள் இந்த சேவையை வழங்கு கின்ற ன. அவற்றில் Splashtop Personal, Team Viewer, Microsoft Remote Desktop, Go to my PCமற்றும் LogMeIn இலவசமாகவும், Screens, iTeleport, Jump Desktop செயலிகள் விற்பனைக்கும் கிடைக்கிறது.